Peigal Jaakkirathai Movie Crew:
Directed: Kanmani
Produced: G. Raghavan
Music: Maria Jerald
Cinematography: Mallikarjun
Edited: Suresh Urs
Production company: Sri Sai Sarvesh Entertainment
CAST; Jeeva Rathnam
Eshanya Maheshwari
Thambi Ramaiah
John Vijay
Rajendran
V. I. S. Jayapalan
Manobala
Pandi
ஊரிலே அனைவரும் பார்த்து நடுங்கும் அண்ணாச்சியாக வருகிறார் தம்பி ராமையா. (கஷ்டம் தான் நம்புங்க!) ஆனால் இவருக்கு பேய் என்ற வார்த்தையை கேட்டாலே பயம். இந்த பயத்தை போக்க உயிர் பயம் இல்லாத ஒருவனை தன்னுடனேயே வைத்துகொள்ள முடிவு செய்கிறார் தம்பி ராமையா. அதன் படி பலமுறை தற்கொலைக்கு முயன்று தோற்கும் ஜீவரத்தினத்தை தேடிப் பிடிக்கிறார் ஆனால்
ஜீவரத்தினதுடன் சேர்ந்து நான்கு பேய்களும் அவர்களுடைய வீட்டுக்குள் புகுந்துவிட, என்ன நடக்கிறது என்பது தான் கதை. சூர்யாவின் மாஸ் பாதி, ஸ்ரீ காந்தின் ஓம் சாந்தி ஓம் மீதி என திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் கண்மணி! இந்த இரு படங்களும் பிளாப் ஆனது ஊரறிந்த ரகசியம்!ஆனால் இயக்குனருக்கு தெரியாமல் போனது ஏனோ!..
ஹீரோவாக நடித்துள்ள ஜீவரத்தினம் முதலில் நடிப்பை கற்றுக்கொள்ள வேண்டும். நாயகியாக நடித்துள்ள ஈஷன்யா குறைவான காட்சிகளில் பரயில்லை ரகமாகத் தெரிகிறார். தம்பி ராமையா தான் இப்படத்தின் முதல் கதாநாயகன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர் படம் ஆரம்பத்தில்லிருந்து படம் முடியும் வரை கதாநாயகனுடன் கதையுடன் பயணிக்கிறார். ஆனால் அலுப்பே மிசுகிறது.
மொட்டை ராஜேந்திரன் படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் வந்தாலும், சிரிக்க வைக்கிறார்.. மனோபாலா வந்து போகிறார்.
படத்தின் முன்பாதி,பின்பாதி நிறைய தொய்வுகள் என்பதால் நம்மை நெளிய வைத்து விடுகிறார்கள்.மல்லிக்கார்ஜினின் ஒளிப்பதிவு படத்திற்கு தூணாக அமைந்துள்ளது. மரிய ஜெரால்டு, தன்னுடைய பின்னணி இசையில் பார்வையாளர்களை மிரட்டி பயமுறுத்த முயற்சித்துள்ளார். பயம் தான் வர மாட்டேங்குது!