யாரையும் காயப்படுத்தாமல் உண்மையை சொல்கிறவர்கள் எண்ணிக்கை தமிழ்ச்சினிமாவில் குறைந்து வருகிறது.
ஆட்டோ டிரைவர்களில் அடாவடியான ஆட்கள் இருந்தாலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை சமுதாயப்பார்வையுடன் சொன்னவர் இயக்குநர் போஸ்வெங்கட் .
கன்னிமாடத்தை அடுத்து மூவ் ஆன் பிலிம்ஸ் தயாரிப்பில் கதை எழுதி இயக்கவிருக்கிறார் .
எம் பி மகேந்திரன், பி பாலகுமார் தயாரிக்கிறார்கள், ‘உரியடி’ விஜயகுமார், பசுபதி இன்னும் சிலர் நடிக்கப்போகிற படத்திற்கு வசனத்தை பாஸ்கர் சத்தி எழுதுகிறார் என்பது குறிப்பிட தகுந்ததாகும். நகைச்சுவையும் இருக்கும்.நறுக்கென குத்துவதும் இருக்கும் இவரது வசனங்களில்.
எதனால் படங்களுக்கு எழுதுவதில் இடைவெளி விழுந்தது என்பது தெரியவில்லை.
கதை என்ன?
நீர்,ஊர்,போர் இம்மூன்றையும் இணைத்து காமெடியாகவும் கருத்தாகவும் சொல்லப் போகிறாராம்.
இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு , ஜியான் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு,, ஹரி சாய் இசை, பாடல்களை விவேகா எழுதுகிறார். கலைக்கு சிவசங்கர் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை தினேஷ் சுப்பாராயன் அமைக்கிறார்.
நல்ல செட்டுதான் சேர்ந்திருக்கு.!