“சாமிய காப்பாத்துற மகா மனுஷன யாரும் படைக்கல.!மதங்களை சொல்லி மனுஷனை பிரிக்கப் பார்க்காதீங்க.சாமிய சாமிதான் காப்பாத்திக்கணும்” என்று யாரையோ செவிட்டில் சாத்துவது போலிருந்தது.
பேசிய இடம் 7 ஸ்டார் ஆடம்பர விடுதியாக இருந்தாலும் பேசியவர் சாதாரணன்.எளிய நடிகன். பெயர் மக்கள் செல்வன் விஜய சேதுபதி. நாட்டு நிகழ்வுகளை பேசுவதற்கு தயங்காத ஒரு போராளி.
“கொரானா வைரஸ். மனச ஆரோக்கியமா வச்சுக்குங்க. மனுசனை காப்பாத்துறதுக்கு மனுஷன்தான் வரணும் மேலே இருந்து யாரும் வரப்போறதில்ல.மதங்களின் பேரை சொல்லி மனுஷனை பிரிக்கப்பார்க்காதீங்க”
இவரின் குரு யாரு”
“எங்கப்பன்தான்.அப்பனை மிஞ்ச உலகத்தில யாருமே இல்ல. தன்னோட மகன் நல்லா வரனும்கிறதுக்காக நல்லது எல்லாம் சொல்லி வைப்பான். ஒரு தடவை நல்ல சரக்க போட்டுக்கிட்டு எங்கப்பன் போட்டோவ பார்த்து நல்லா திட்டிட்டேன். நான் நல்லா இருக்கிறத பாக்காம எங்கேய்யா போயிட்டேன்னு சத்தம் போட்டேன்” என்றார் மக்கள் செல்வன்.