இன்றும் ஒரு குட்டிக் கதை சொன்னார் தளபதி விஜய்.
“விஜய்சேதுபதி. அவருக்குன்னு ஒரு மார்க்கெட் இருக்கு.பிசினஸ் இருக்கு. நம்ம படத்தில ஏன் நடிக்கணும்னு நான் அவரிட்டயே கேட்டேன்.
‘எனக்கு உங்களை பிடிக்கும்னு சொல்லி நம்பள ஆப் பண்ணிட்டு போயிட்டார். சரி பெயரில் மட்டும் இடம் கொடுக்கல .மனசிலேயும் இடம் கொடுத்திருக்கார்னு நெனச்சிட்டேன்.தாங்க்ஸ் நண்பா!.
என்னுடைய படத்தில ஒரு பாட்டு வரும்.”எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே! நீ நதி போல ஓடிக் கொண்டிரு”ன்னு வரிகள் இருக்கும் .அதுதாங்க நம்ப ஒவ்வொருவர் வாழ்க்கையும் ! ஓடிட்டு இருக்கிற நதிக்கு சிலர் விளக்கு ஏத்தி வச்சு கும்பிட்டு வழி அனுப்புவாங்க. சில இடங்களில் பூ போட்டு வணங்குவாங்க. .சில இடத்தில நமக்கு பிடிக்காதவங்க கல்லை போட்டு விளையாடிப்பார்ப்பாங்க.
நாம்ப நம்ம வேலையை செஞ்சிட்டு அந்த நதி மாதிரி ஓடிட்டே இருக்கணும்.
உண்மையா இருக்கிறத விட சில இடங்களில் ஊமையா இருந்திடணும்ங்க!”என்றவரிடம் தொகுத்து வழங்கியவர் “நீங்க கோட்டு சூட்டில் சூப்பரா இருக்கீங்க ?”என்றார்.
“எந்த விழாவா இருந்தாலும் போர் அடிக்கிற மாதிரியே டிரஸ் போட்டுட்டு போறீங்க.இந்த விழாவுக்கு சூட் போட்டுட்டுப் போங்கன்னு காஸ்ட்யூம் டிசைனர்தான் சொன்னாங்க.நண்பர் அஜித் மாதிரி டிரஸ் பண்ணிட்டு போகலாம்னு …”என்று வார்த்தையை முடிப்பதற்குள் ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள்.அதற்கு என்ன அர்த்தம் என்பது டிவிட்டரைப் பார்த்தால்தான் தெரியும். நெய்வேலியில் கூடிய ரசிகர்கள் கூட்டம் பற்றி பேசுகையில் “அது வேற தனி லெவலுங்க” என்றார் .