அக்கட தேசத்தில் ஒரு பிரச்னையை கிளப்பிவிட்டு வந்திருக்கிறார் திரிஷா.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் நடிப்பதற்கு திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த படத்தில் ராம்சரணும் நடிப்பதாக இருந்தது.
திடீரென “நான் இந்த படத்திலி இருந்து விலகிக்கொள்கிறேன்” என சொல்லிவிட்டு சென்னைக்கு வந்து விட்டார் திரிஷா.
அவரது இந்த முடிவு அங்கு அதிர்வலைகளை கிளப்பிவிட்டது.
“எதற்காக திரிஷா அந்த முடிவை எடுக்க வேண்டும்.என்ன நடந்தது .”என்பது புரியாமல் ராம்சரண் குழம்பி விட்டார். யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சென்னைக்கு பறந்த திரிஷா தனது சோசியல் மீடியாவில் முடிவை அறிவித்தது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ராம் சரண் சுலபத்தில் கோபப்பட்டுவிடுவார்.அவர் எதுவும் சொல்லி இருப்பாரா?
விசாரித்தபோது படக்குழுவினருக்கு தெரியவந்தது பின் வரும் காரணங்கள்தான்.!
- கதையில் மாற்றம் செய்ததை திரிஷாவுக்கு சொல்லவில்லை.
- ராம்சரணுக்குப் பதிலாக மகேஷ்பாபுவை கொண்டு வந்தது கோபத்துக்கு மற்றோரு காரணம்.
- மகேஷ்பாபுவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததை திரிஷா விரும்பவில்லை.
- மற்றோரு நடிகையை ஒப்பந்தம் செய்தது தன்னை இழிவு படுத்துவதற்கே என நினைத்தாராம்.
இதனால் ஆச்சாரியா படத்திலி இருந்து விலகி விட்டார் . இதுதான் அவர்கள் தெரிந்து கொண்டிருக்கிற காரணங்கள்.
இப்போது திரிஷாவுக்கு பதிலாக காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்யவிருப்பதாக அக்கட தேசத்து பேனாக்காரர்கள் சொல்கிறார்கள்.