தடுக்கி விழுந்தாலே அந்த நடிகரைப்பற்றிய செய்திகள் தசாவதாரம் எடுத்து பல கோணங்களில் வெளியாகிவிடும்.
இதுவும் அத்தகைய செய்திதான் என்றாலும் நடந்திருந்த விபத்து கடுமையானதுதான்.அந்த நடிகருக்கு 11 மணி நேரம் ஆபரேஷன் நடந்திருக்கிறது.
அதுவும் அமெரிக்காவில்.!
மனிதர் இன்னும் இந்தியா திரும்பவில்லை.
‘காதல்னா சும்மா இல்லை’ ,’நாளை நமதே ‘ஆகிய படங்களில் நடித்திருப்பவர் சர்வானந்த் .ஆந்திராவிலும் முன்னணியில் இருப்பவர் .தமிழ் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவுடன் ஜோடி கட்டியவர்.
சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் ஸ்டண்ட் காட்சியில் நடித்தபோது தோள் பட்டையில் கடுமையான எலும்பு முறிவு.!
அமெரிக்காவுக்கு கொண்டு சென்றார்கள். ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்து குணம் பெற்று வருகிறார் என்கிற செய்தி ஆறுதலாக இருந்த நேரத்தில்தான் இன்னொரு சேதி.!
மறுபடியும் ஆபரேஷன் செய்தாக வேண்டும் .ஆபத்தான நிலையில் இருக்கிறார் !
என்னய்யா நடக்குது?
“மறுபடியும் ஆபரேஷன் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இப்ப அவர் நல்லா தேறி வருகிறார். இனி பிரச்னை எதுவும் வராது.சீக்கிரமே இந்தியாவுக்கு திரும்பி விடுவார் ” என்கிறார்கள்.