மத்திய அரசின் ‘வருமானவரி பிடித்தத்தில் நடப்பில் உள்ள பகிர்மான விகிதாசாரம் தொடர்பான குறைகளை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்வதற்காக நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை தென்னிந்திய திரைப்பட வர்த்தகசங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினார்கள்.
நல்ல முயற்சி.!
பலனும் கிடைத்திருக்கிறது. ஒரு குழுவை அமைத்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
அந்த குழுவில் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது இயங்காத காரணத்தால் பிரதிநிதித்துவம் இல்லை. மேலும் இல்லாத சங்கத்துக்கு எதற்கு மாலை மரியாதை என்று அரசு நினைத்திருக்கலாம்.
வருகிற 27 ஆம் தேதியில் இருந்து’படங்களை விநியோகிக்கமாட்டோம் ‘என போராட்டத்தில் இறங்கிய விநியோகஸ்தர்கள் சங்கம் மாநில அமைச்சர்களையோ .மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையோ சந்திக்க முயற்சி பண்ணியதாகக்கூட தெரியவில்லை. ஆனால் அதற்கு அவசியமில்லாமல் மார்ச் முழுமையும் தியேட்டர்களை மூடச்சொல்லி முதல் மந்திரி எடப்பாடி உத்திரவு போட்டிருக்கிறார். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் கதை!
டி .ராஜேந்தர் அறிவித்த முதல் போராட்டத்தை கொரானா வைரஸ் தோற்கடித்து விட்டது.