அதாவது எங்கேயும் நேரடியாக முறையிட்டால்தான் நல்லவை நடக்கும் போலிருக்கிறது.!
சற்றே பின்னோக்கிப் பாருங்கள்.
முதல்வராக கலைஞர் பதவியில் இருந்த காலம். சென்னை நேரு ஸ்டேடியத்தில் திரைப்பட கலைஞர்கள் திரண்டிருந்தார்கள். முக்கிய புள்ளிகளும் இருந்தனர்.
ஆனால் மனதில் அழுத்திக்கொண்டிருந்த ஆதங்கத்தை அவர்களால் சொல்ல முடியவில்லை.
சொன்னால் ஆளும்கட்சியினரின் ஆவேசத்துக்கு ஆளாகி விடுவோமோ என்கிற பயம்.
“அய்யா “என்று பேசத்தொடங்கிய ‘தல’அஜித்குமார் உண்மையைப் போட்டு உடைத்தார்.
“இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு வந்தாகவேண்டும் “என்கிற நிர்பந்தம்,அச்சுறுத்தல் தங்களுக்கு இருப்பதை பகிரங்கமாக சொன்னார்.
உலகநாயகன் கமல்ஹாசன் “தன்னை நடித்துக்காட்டும்படி போலீசார் நிர்பந்தம் செய்வதாக “சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமய்யத் தலைவர் கமல்ஹாசன் தாக்கல் செய்திருந்த மனுவும் அவர் மிரட்டபட்டதின் விளைவுதான்!
நடித்துக்காட்டும்படி கமல்ஹாசனை போலீசார் நிர்பந்திப்பதாக அவரது வழக்குரைஞர் தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு மீதான தீர்ப்பு இன்று பிற்பகலில் வழங்கப்பட்ட்து.
இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து மூவர் பலியான விபத்து தொடர்பாக “நாளை (18 )விபத்து நடந்த இடத்துக்கு கமல்ஹாசன் செல்ல வேண்டியதில்லை. தேவைப்பட்டால் மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகலாம்”என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.