திரைப்பட விழாக்கள் என்றால் அங்கு வருகை தருகிற நடிகர் நடிகையர்,பிரமுகர்கள் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும்போது கை குலுக்கிக் கொள்வார்கள்.சற்று நெருக்கமானவர்கள் என்றால் கட்டி அணைத்துக் கொள்வார்கள்.
இப்போதைய சிக்கல் என்னவென்றால் கொரானா தொற்று கிருமியானது கைகுலுக்கும்போது பரவலாம்.
கட்டிப்பிடித்து காதோரம் ஹாய் சொல்லும் போது பரவலாம் என்பதுதான்.
இதனால் அந்த இரண்டு மரியாதைகளையும் சிறிது காலம் மறந்து விடுங்கள் என்கிறது மருத்துவ எச்சரிக்கை.
வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி இரண்டாவது பெண் குழந்தையை அண்மையில்தான் பெற்றெடுத்தார். ஆண் குழந்தையும் இருக்கிறது.
படங்களில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட்டிலிருந்து தெலுங்கு ,தமிழ் என வாய்ப்புக்காக தெற்கு வந்தவர். இங்கும் டாட்டா பய் பய் என கையைக்காட்டிவிட்டதால் சொந்த ஊருக்கே சென்று விட்டார்.
இவரது மனக்குறை ” கட்டிப்பிடிக்காதே ,கையை குலுக்காதே என்று ஒதுங்கினால் கோபப்படுகிறார்கள் .கொரானா நோய்க்கிருமி தொற்றிலிருந்து தப்புவதற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் கேட்பதில்லை.
மற்ற நாடுகள் செய்யத் தவறியதை உணர்ந்து விலகி கொள்ளுங்கள் என்றால் கேட்க மறுக்கிறார்கள்!”என வருத்தப்பட்டிருக்கிறார்