கொரானா வைரசுக்கு பயந்து மொத்த இந்தியாவும் பயந்து போய் இருக்கிறது.
பேய் பிசாசு என்பது உயிரோடு வந்திருக்கிறது என்றால் கூட பயந்திருக்க மாட்டார்கள். அதை காட்டி பயமுறுத்தியே அடம் பிடிக்கிற பிள்ளைகளுக்கு சோறு ஊட்டி விடுவார்கள். ஆனால் கொரானா அப்படி இல்லை.
ஆள் காலி.!
மொத்த திரைப்பட உலகமும் முடங்கி வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது.
ஆனால் வட நாட்டில் ரகுல் ப்ரீத் சிங் ஒரு விளம்பர படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
“இது விளம்பர படம்தான். முன்னேற்பாடாக எல்லாவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து விட்டு மாஸ்க் போட்டுத்தான் படப்பிடிப்பு நடத்துகிறோம்” என்கிறார் ரகுல் பிரீத்.
கோலிவுட்டில் விக்னேஷ் சிவன்,பாலிவுட்டில் ரகுல் பிரீத் .
இந்த பட்டியலில் இன்னும் யார் யாரோ?