காசி என்கிற வாரணாசியில் ‘அட்ரங்கி ரே ‘என்கிற இந்திப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
இந்த படத்தில் நம்ம தனுஷ் ஒரு ஹீரோ.அக்சய் குமார் இன்னொரு ஹீரோ. ஹீரோயின் சாரா அலிகான்.
இவர் சயீப் அலிகானின் முன்னாள் மனைவி அம்ரிதா சிங்கின் மகள். அப்பா இசுலாமியர் .அம்மா இந்து.
அம்மா அம்ரிதா சிங்குடன் படப்பிடிப்புக்கு வந்திருந்த அம்ரிதா சிங் இந்து கோவிலுக்கு அம்மாவுடன் சென்று வழிபாடு நடத்தி இருக்கிறார்.
இந்த வழிபாட்டு படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகவே விவகாரம் வெடித்திருக்கிறது.
இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிற ஆலயத்தில் சாரா அலிகானை அனுமதித்தது ஏன் என்று சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இசுலாமிய அமைப்புகளும் கண்டித்திருக்கின்றன.