சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அதனால் பல கோடிகள் நஷ்டம். திரையரங்கு உரிமையாளர்கள் எங்களுக்கு நெருக்கடி தருகின்றனர். எனவே, நஷ்டமான தொகையை திருப்பிக்கொடுக்க வேண்டும்” என்று விநியோகஸ்தர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், லிங்கா படத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஜனவரி 10 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனராம். இது குறித்து ‘லிங்கா’ திரைப்படத்தின் திருச்சி, தஞ்சாவூர் விநியோகஸ்தர் சிங்காரவேலன் கூறியதாவது,:லிங்கா’ திரைப்படத்தில் நஷ்டம் ஏற்பட்டது .45 கோடியில் தயாரிக்கப்பட்ட ‘லிங்கா’ படத்தை 220 கோடிக்கு வியாபாரம் செய்திருக்கிறார்கள். ஆனால், விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை.
எங்கள் நஷ்டத்தை சரிசெய்ய ஒரு பதில் சொல்லுங்கள் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி வருகிற ஜனவரி 10ஆம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்துள்ளோம். ‘லிங்கா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் இந்த உண்ணாவிரத்ததில் கலந்துகொள்கிறார்கள் என்கிறார்.