தமிழ்ச்சினிமாவில் நாக்குத்தள்ள உழைத்தாலும் சிலர் அதை மதிப்பதில்லை. உழைப்பை எந்த வகையில் இழிவு படுத்தலாம் என எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.
அத்தகைய அனுபவங்கள் இயக்குநர் சேரனுக்கு எக்கச்சக்கம் !
அவர் நடித்திருந்த ராஜாவுக்கு செக் என்கிற படம் நல்ல படம். சாய் ராஜ்குமார் இயக்கி இருந்தார்.சிருஷ்டி டாங்கேயும் நடித்திருந்தார். விமர்சனங்களும் பாராட்டியிருந்தன. ஆனால் தியேட்டரில் பிக் அப் ஆவதற்குள் படத்தை தூக்கி விட்டார்கள்.
இந்த படத்தை அண்மையில் அமேசான் வழியாக படத்தைப் பார்த்த ஜெகதா என்கிற பெண் பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதைப் படித்த இயக்குநர் சேரனுக்கு ரொம்பவே வலி.!
“அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை… எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன்ல டயலாக் இருக்கும்.. அப்படி கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டங்கம்மா…. அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க… வயிறு எரியுதும்மா.. சும்மா விடாது எங்களோட உழைப்பு…”