ஏழு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு
நிர்பயா என்கிற பெண்ணை 2012 -ஆம் ஆண்டு ஆறு மிருகங்கள் சேர்ந்து பாலியல் வன்முறை செய்து விட்டு அந்த பெண்ணையும் கொலை செய்து விட்டனர்.அறுவரும் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்தது.அதில் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான்.மற்றொருவன் சிறுவன் என சொல்லி வெளியில் வந்து விட்டான்.
எஞ்சியிருந்த அக்சய் தாக்குர் ,பவான் குப்தா ,வினய் சர்மா ,முகேஷ் ஆகிய நால்வர் மீதும் வழக்குத் தொடர்ந்து நடந்தது.
அரசியல் நிர்பந்தங்களையும் மீறி நிர்பயாவின் அம்மா கடுமையாக போராடியதின் விளைவு இன்று அதிகாலையில் திகார் சிலையில் அந்த நால்வரும் தூக்கில் தொங்கவிடப்பட்டனர் சாகும்வரையில்!
இந்த நால்வரும் இரவில் தூக்கமில்லாமல் இருந்திருக்கிறார்கள்.முகேஷ்,வினய் இருவரும் இரவில் டின்னர் சாப்பிட அக்சய் சாயா மட்டும் குடித்திருக்கிறான் .வினய் அழுதிருக்கிறான் .
என்ன செய்வது? கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனைதான் என்பது இறுதி செய்யப்பட்டு விட்டால் பாலியல் வன்முறை தடுக்கப்படும்.
தூக்கில் போடப்படட நால்வரில் முகேஷ் மட்டும் உடல் உறுப்புதானம் செய்திருக்கிறான்.