தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்து நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட இரண்டாவது அணியும் களத்தில் இறங்கி இருக்கிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி என்பது இந்த அணியின் பெயர்.
இராம நாராயணன் முரளி என்கிற ராமசாமி தலைவர் பதவிக்கும், உதவித் தலைவர்கள் பதவிக்கு சுபாஷ் சந்திரபோஸ், மைக்கேல் ராயப்பன் ஆகியோரும் ,செயலாளர் பதவிக்குராதாகிருஷ்ணனும் ,பொருளாளர் பதவிக்கு சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.மற்றும் போட்டியிடும் செயற்குழு உறுப்பினர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இந்த அணி நீங்கலாக மற்றும் ஒரு அணி போட்டியிடலாம் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் வேட்பாளர்கள் முன்வரவில்லை என்பதாக சொல்கிறார்கள்.
என்னடா இது, இந்த கோலிவுட்டுக்கு வந்த சோதனை!
( நல்ல போட்டோகிராபர் யாரும் கிடைக்கலையா ?)