— Kamal Haasan (@ikamalhaasan) March 21, 2020
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன், தனிமைபடுத்துதல் குறித்து மக்களுக்கு உள்ள அச்சத்தை போக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னய்யா வீட்டிலேயே இருக்க சொல்றீங்க. வருமானத்துக்கு என்ன பண்ணப்போறோம். மார்ச், ஏப்ரல் பசங்க ஸ்கூல் பீஸ் இருக்கே, நாளைக்கு கடைகள் எல்லாம் திறந்திருக்காதே, கையில காசு இல்லாமல் என்ன செய்வோம் என்று நிறைய குழப்பங்கள் இருக்கும்.
இதையெல்லாம் செய்ய வேண்டுமென்றால் உங்களது உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். அதனால் தான் இந்த இரண்டு வாரம் மிகவும் முக்கியமானது.இந்த இரண்டு வாரத்தை குடும்பத்துடன் செலவிடுங்கள், படிக்க நினைத்த புத்தகம், பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்ட படம், கற்க நினைத்த இசை ஆகியவற்றிற்காக இந்த நேரத்தை செலவிடுங்கள். வீட்டில் உள்ள பெரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.
குழந்தைகளை ஆன்லைன் கோர்ஸில் சேர்த்துவிடுங்கள். அவசர கால சமையல் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுங்கள். வீட்டிலேயே இருங்க… பத்திரமா இருங்க… நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என படித்ததை செயலுக்கு கொண்டு வரும் நேரமிது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்