பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று இன்று நாடே சுய ஊரடங்கு அனுசரித்துக் கொண்டிருக்கிறது.
மக்கள் யாரும் வெளியில் வரவில்லை. கொரானா என்கிற உயிர் கொல்லியைப் பற்றிய அச்சம்.
ஊர் ஊருக்கு முன்பொரு காலத்தில் குழி தோண்டி வாழ்ந்த பழக்கம் தமிழ் மக்களுக்கு இருக்கிறது. முன்னோர்களை கேட்டால் தெரியும்.
இரண்டாம் உலகப்போர் பற்றிய அச்சம் கடைக்கோடி தமிழனுக்கும் இருந்தது. ஏஆர்பி தொட்டி என்று நகரங்களில் பல இடங்களில் கட்டி தண்ணீர் நிரப்பி இருந்தார்கள். விமான வழி தாக்குதல் இருந்தால் தீ விபத்தை தடுக்க அத்தகைய தொட்டிகள் பயன் படும். ஆனால் அத்தகைய தொட்டிகளில் நம் மக்கள் வீடுகளில் பிடிபடுகிற பெருச்சாளிகள் எலிகளை போட்டு அதன் வழியாக நோய்களை பரப்பினார்கள்.ஆனால் அபாய சங்கு ஒலிக்கும் போதெல்லாம் மக்கள் வீடுகளை விட்டு வெளிவருவதில்லை. மதுரையில் அத்தகைய தொட்டிகளை நீண்ட காலம் அப்படியே விட்டு வைத்திருந்தனர்.
தற்போது அபாய சங்கு ஒலிக்காமலேயே மக்கள் வீடுகளுக்குள் முடங்கி விட்டார்கள். கொரானா வைரஸ் உயிர்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த உணர்வு …வாழ்க !
இந்த நோயைப் பற்றிய ஒரு பாடலை அதிமுகவை சேர்ந்த ஒரு நடிகர் வீடியோவில் ஏற்றி அரங்கேற்றி இருக்கிறார்.
“கொரோனா கொரோனா வராதே.. எங்களை நீ என்றும் தொடாதே ” என்கிற இந்தப்பாடலை கவிஞர் அறிவுமதி எழுதி இருக்கிறார்.. ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருக்கும் சஜித்துல்லா என்பவர் இசையமைத்துள்ள இந்தப்பாடலை பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து விதமான பின்னணிகளும் இடம் பெறுமாறு இரண்டே நாட்களில் படமாக்கியுள்ளார் பஷீர்.
இந்தப்பாடலில் 25 நட்சத்திரங்கள் பங்கேற்று நடித்துள்ளனர். இவர்கள் அத்தனை பேருக்குமே கொரோனா சோதனை செய்துவிட்டு அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு அதன்பின்னரே இந்த பாடலை படமாக்கியுள்ளார் பஷீர்.
—