கொரானா நோய்க்கான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருப்பவர் பாலிவுட் பாடகி கனிகா கபூர்.
லக்னோவ்வில் இருக்கிற சஞ்சய் காந்தி மருத்துவ போஸ்ட் கிராஜுவேட் விஞ்ஞான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தனி அறை ,டாய்லட் ,ஏ.சி ,டி.வி என சகலவசதிகளுடன் கரோனா நோய்க்கான சிகிச்சை கனிகாவுக்கு வழங்கப்படுகிறது.
“தன்னுடைய அறை தூசாக இருப்பதாகவும் ,கொசுக்கள் இருப்பதாகவும் கனிகா மருத்துவ நிர்வாகம் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்த குற்றச்சாட்டினை மருத்துவமனை பேராசிரியர் ஆர்.கே.திமான் மறுத்து இருக்கிறார்.
“அவர் முதலில் தன்னை நோயாளியாக உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நட்சத்திரமாக நடந்து கொள்ளக்கூடாது.ஒரு நோயாளிக்கான சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.” என்கிறார்.