இயக்குநர் மணிரத்னம் -சுகாசினியின் ஒரே மகன் நந்தன்.
பொதுவுடமை சித்தாந்த விரும்பி.. லண்டனில் படித்து வருகிறார்.
கடந்த புதன் கிழமை சென்னை திரும்பிய நந்தனை வீட்டிலேயே கண்ணாடி அறையில் தனிமைப்படுத்தியிருக்கிறார்கள். கணவனும் மனைவியும்.!
எதனால் இந்த தனிமைச்சிறை.!
“சிறையில்லை ! நந்தனுக்கு கொரானா வைரஸ் இல்லை. இருந்தாலும் அவரது பாதுகாப்பு மற்றவர்களின் பாதுகாப்பு நினைத்து நந்தன் கடந்த 5 நாட்களாக தனித்து ஒரு கண்ணாடி அறையில் இருக்கிறார்.”என்கிறார் சுகாசினி மணிரத்னம்.
நந்தன் என்ன சொல்கிறார்?
“எனது பாதுகாப்பு ,எனது குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி தனித்து இருந்து விட்டேன். இன்னும் 9 நாட்கள் இப்படியே இருப்பேன்.”பொதுவாக வெளிநாடுகளில் இருந்து திரும்புகிறவர்கள் 14 நாட்கள் இப்படி தனித்து வாழ்வது ஆரோக்கியமாக இருக்கும் “என்றார் .