குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படங்களை எடுத்தவர் இயக்குனர் விசு .
எழுத்தாளர் ,நடிகர் ,சமூக சிந்தனையாளர் .மனதுக்கு எது சரியெனப்படுகிறதோ அதை துணிச்சலுடன் சொல்லக்கூடியவர்.
சகோதரர்களை அரவணைத்து சென்ற மனிதரின் மகள்கள் மூவரும் இந்தியாவில் இல்லை. அமெரிக்காவில் இருக்கிறார்கள்.
தந்தை இறந்த செய்தி அறிந்ததும் துடித்துப்போன அவர்கள் தந்தையின் முகத்தை கடைசியாக ஒரு தடவை பார்த்து விடுவோம் என ஆசைப்படுவது மனித இயல்புதான்! ஆனால் விமானங்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால் அவர்களால் இந்தியா வர இயலாது என்கிறார்கள்.
இன்று விசுவின் இறுதிச்சடங்கு நடக்கிறது.
கொரானாவின் அச்சுறுத்தலால் அவரது ரசிகர்கள் ,உற்றார் உறவினர் ,நண்பர்கள் பெரும் அளவில் கலந்து கொள்ள முடியாது.
வரகவி பாரதியாரின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் 11 பேர்கள்தான் கலந்து கொண்டார்கள் என சொல்வார்கள்.
மக்களாலும் திரையுலக நண்பர்களாலும் கொண்டாடப்பட்ட விசுவின் இறுதி ஊர்வலத்தில் இத்தனை பேர்தான் கலந்து கொண்டார்கள் என்பதை எண்ணி எழுதிவிட முடியும்.
அரட்டை அரங்கம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் விசு.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.