சுய ஊரடங்கு ஓய்வெடுக்கப்போகும் அந்த ,மஞ்சள் வெயில் மாலைப் பொழுதில் சாளரத்தில் நின்று கைதட்டுங்கள்..நம்மைக் காத்து வருகிற மருத்துவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில்!…
இப்படி சின்னதாய் ஒரு கோரிக்கை வைத்திருந்தார்கள்.
ஆனால் நமது சென்னையில் சின்ன போகியாகவே கொண்டாடிவிட்டார்கள். கூட்டம் கூடாது என்பதுதான் மருத்துவ அறிவுரை. ஆனால் தட்டு தாம்பாளங்களை எடுத்துக்கொண்டு வீதிக்கே வந்து விட்டார்கள்.தட்டித் தீர்த்து விட்டார்கள்.
இன்னொரு முரண்…இது இனிய முரண்.
விக்னேஷ் சிவன் -நயன்தாரா இவர்கள் காதல் சிட்டுகள்.
சிட்டுகள் சில நிமிடங்கள் கூட பெட்டையை விட்டு பிரிந்திருக்காது என்பார்கள். அதைப்போல இவர்கள் இருவரது செல்பியில் பதியும் அவர்களின் பிம்பங்களும் சேர்ந்தே இருக்கும் சிட்டுக்களை போல.!
விக்னேஷ் சிவன் கவிஞரும் ஆவார்.
“கார் காலக் குளிரும் மார்கழிப்பனியும் ,கண்ணே உன் கை சேரத் தணியும் “என்பது வாலிப கவிஞர் வாலியின் வரிகள். ஆழ்ந்த கருத்துள்ள அற்புதமான வரிகள்.
இங்கு விக்கியும் நயனும் தங்களின் ஐந்து நிமிட நேர கைதட்டல் எப்படி இருந்தது என்பதை புகைப்படம் போட்டு விளக்கி விட்டார்கள்.
விக்கியின் ஒரு கரமும் நயனின் ஒரு கரமும் சேர்ந்து தட்டி உணர்த்தின நன்றிப் பெருக்கினை.!
வாழ்க வளமுடன்.!