நடிகைகள் குண்டாவதும் மெலிவதும் அந்தந்த கேரக்டர்களின் அவசியத்தைப் பொருத்தது.
குழந்தை உண்டாகி இருப்பதை போல நடிப்பதற்கு நடிகை குண்டாவது அவசியம்.
சைஸ் ஜீரோ என்கிற படத்தில் நடிப்பதற்காக வெயிட் போட்டார் நடிகை அனுஷ்கா. அதுவே அவரது திரை உலக வாழ்க்கையை தொடர விடாமல் செய்து விட்டது.
பாகுபலி படத்தில் கணினி உத்தியினால் அவரது பருமனை குறைத்துக்காட்டினார்கள். இதற்காக பெரிய செலவு ஆனது. ஆனால் உடலை மெலிய வைப்பதற்காக அவர் எத்தனையோ வழிகளில் முயற்சி செய்தார் முடியவில்லை.
யோகா டீச்சரான அவர் வெளிநாடு சென்று பார்த்தும் அது முடியாமலேயே போயிற்று. இன்று வரை அவர் சற்று தடித்த உடம்புடன்தான் இருக்கிறார்.
இதையெல்லாம் நினைவூட்டுவது எதற்காக என்றால் அனுஷ்கா வழியில் இன்னொரு கிருத்தி .!
பாலிவுட் நடிகை.இவருக்கு தெலுங்கிலும் மார்க்கெட் இருக்கிறது.
ஆந்திரத்தின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுடன் நடித்தபோது ஒல்லியாக இருந்தார்.
தற்போது குண்டாகி விட்டார். பாலிவுட்டில் ‘உண்டாகி’ விட்ட கேரக்டர். 15 கிலோ எக்ஸ்டிராவாக ஏற்றியாச்சு. மிமி என்கிற படத்தில் வாடகைத் தாயாக நடிக்கிறார். ஒல்லியான உடம்புக்காரி உண்டானவள் மாதிரி நடித்தால் எடுபடாது என்பதால் சதை போட வைத்து விட்டார்கள். ஆனால் ஆந்திராவில் சாய் ஹீரோவாக நடிக்கிற படத்தில் ஒல்லி உடம்புக்காரிதான் வேண்டும் என்கிறார்கள்.
நடிகை முழிக்கிறார் என்ன செய்ய !