ஒரு காலத்தில் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முப்பெருந்தேவியர்களாக இருந்தார்கள் அனுஷ்கா,திரிஷா ,ஸ்ரேயா ஆகிய மூவரும்.!
நாயக நடிகர்களைக் காட்டிலும் நாயகி நடிகைகளுக்கு திரை உலகில் வாய்ப்புகள் ஒரு கட்டமுடன் நின்று போகும்.
டூயட் பாடியவர்களை அம்மா அக்காவாக மாற்றி ரொமான்ஸை கட் பண்ணி துறவறம் அனுப்பி விடுவார்கள்.
அவர்களும் “அத்தான் “வசனத்திலிருந்து விடுபட்டு “என்னடா தம்பி ” என்றோ “அம்மா சொல்றதை கேளுடா” என்றோ மாடுலேஷனை மாற்றிக் கொள்ள வேண்டும் .
ஆனால் காதலும் இல்லாமல் சாரமும் இல்லாமல் சத்தில்லாத பண்டமாக சில முன்னணி நடிகைகள் இருப்பதுதான் பெரும் சோகம்..ஆனால் இதுதான் எழுதப்படாத சட்டம். பெண்ணுக்குரிய முதன்மையான கேரக் டர்கள் வந்தால்தான் அவர்களது திறமையை வெளிப்படுத்த முடியும்.அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
அனுஷ்கா ,த்ரிஷா ,ஸ்ரேயா ஆகிய மூன்று நடிகைகளும் இன்றும் இளமை மங்காமல் ,வாலிபம் வாடாமல் முகமும் முற்றலாக வதங்காமல் இருக்கத்தான் செய்கிறார்கள். திறமையானவர்கள்.
அனுஷ்காவை யாரும் தேடுவதில்லை.
திரிஷாவை ஒப்பந்தம் செய்திருந்த சிரஞ்சீவி தனது படத்துக்குள் காஜலை கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே திரிஷாவை கழட்டி விடுவதற்கு சில காரியங்களை கதையில் செய்தார். அதை த்ரிஷாவுக்கும் சொல்லவில்லை.
இது தனது சுயமரியாதைக்கு சோதனை என கருதிய திரிஷா சொல்லாமலேயே வெளியேறிவிட்டார். காஜல் சுலபமாக உள்ளே வந்து விட்டார்.
ஸ்ரேயாவை கவுதமி புத்ராவுடன் அனுப்பி வைத்து விட்டார்கள் .
திறமையான நடிகைகளுக்கு கதவு சாத்தப்பட்டு விட்டதா?