திரைப்பட நடிகைகள் ஒரு விழாவுக்கு வருகிறார் என்றால் ‘நமக்கு எந்த வேலை இருந்தாலும் அதை ஒதுக்கித்தள்ளிவிட்டு நடிகையை தரிசனம் செய்வதே புண்ணியம்’ என்று கருதுகிற புனிதர்களும் இருக்கிறார்கள்.
முடிந்த பின்னர் “இந்த மூஞ்சியைப் பார்க்கவா வந்தோம் “என்று வேண்டுமென்றே கமெண்ட் அடிக்கிற கண்ணியவான்களும் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில்தான் நடிக ,நடிகையர் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்வதை ஒரு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொரானாவின் பாதிப்பை அறிந்த சில நடிகைகள் தங்களின் நல்லெண்ணத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
“வீட்டிலேயே இருங்கள் வெளியே வராதீர்கள் “என்று அறிவுறுத்தியது மத்திய மாநில அரசுகள். கொரானாவின் கோரம் .கொடூரம் அரசுக்குத்தான் தெரியும். மருத்துவர்கள் அரசியல் ஆய்வாளர்கள் சொன்ன கருத்துக்களை ஏற்பது அரசின் கடமை பிரதமர் சொன்னதை நடிகை மஞ்சிமா மோகனும் சொன்னார்.
சத்ரியன் ,தேவராட்டம் ,அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் நடித்திருப்பவர்.சிம்புவுடன் நடித்திருக்கிறார்.
“வீட்டிலேயே இருங்கள் “என்று இவர் சொன்னதற்கு ஒருவர் வசைபாடி டிவீட் செய்திருந்தார்.
அதற்கு மஞ்சிமா பதில் டிவீட் போட்டிருந்தார். “இந்த மாதிரியான ஆட்களுக்கு நான் பதில் சொல்வதில்லை . புறம் தள்ளிவிடுவேன் .ஆனால் இவர்களும் நம்மிடையேதான் இருக்கிறார்கள்.வேலை இல்லாமல் வீட்டில் இருப்பது அவ்வளவு கஷ்டமா? பணம் ஒன்றும் வானத்தில் இருந்து காட்டுவதில்லை என்பது எனக்கும் தெரியும் “என்று சொல்லியிருக்கிறார்.