எத்தகைய மன நோய் என்பது தெரியவில்லை …
வேடிக்கையான மனுஷியா,விசித்திரமாக சிந்திப்பதுதான் அவரது குணமா…என சொல்ல இயலாமல் வாழ்கிற சில பெண்கள் இருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் நடிகை மீரா மிதுன்.
மிஸ் தமிழ்நாடு சவுத் என்பதாக ஒரு அமைப்பில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்
சினிமாவில் நுழைவதற்காக அதுவும் ஒரு விசிட்டிங் கார்டு. 8 தோட்டாக்களில் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் பிக்பாஸ் என்கிற ரியாலிட்டி ஷோவினால்தான் பிரபலமானார்.
சேரனுடன் மல்லுக்கட்டியது சக போட்டியாளர்களுடன் சண்டை இழுத்தது என விவகாரங்களை இழுத்துப் போட்டுக் கொண்டதால் மீடியாக்களின் வெளிச்சம் பட்டது.
இதன் பின்னர் விவகாரமான கருத்துக்கள் ,விகாரமான சிந்தனைகள், இயற்கையாக அமைந்த உடல் அழகினை அரை நிர்வாண நிலையில் பகிரங்கப்படுத்தல் என மீரா மிதுன் தன்னை இந்திய அளவுக்கு கொண்டு சென்றார்.
“உதடுகளை விரும்புகிறாய்,பெண்ணின் மார்புகள் மீது ஆசைப்படுகிறாய் …இவைகளை விரும்புகிறவர்களாக நீங்களும் இருந்தால் என்னை பின்பற்றலாம் “என்பது இவரது வழியாக இருக்கிறது.
தற்போது கொரானாவினால் நிலை குலைந்து போய் தனித்து நிற்கிற மனிதர்களை இழிவு படுத்தும் விதமாக டிவிட்டரில் படம் போட்டு அதை சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த், சல்மான்கான் ஆகியோருக்கு டாக் ( tag ) செய்திருக்கிறார்.
படத்துக்கான வாசகம் என்ன தெரியுமா?
“சொர்க்கத்தின் நுழைவு வாசலில் ‘ வாழ்க்கை தனிமையாக ‘ இருக்கிறது.”