கல்யாண ஆசை இல்லாத மனுசனோ மனுசியோ இருக்க இயலாது.
மானுட வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் சேருவது அவசியம்.
இதை தவிர்ப்பது அல்லது துறவு கொள்வது என்பது மனம் சார்ந்தது. அதில் அவர்கள் உண்மையாக இருப்பார்கள் என்பது அரிது. ஆனால் அரிதானவர்களும் இருக்கிறார்கள்.
மணமேடை தவிர்த்து இன்று வரை ‘சிங்கிளாக ‘வாழ்ந்து மறைந்த ,வாழ்கிறவர்களை சிறு பட்டியலாக தர இயலும்.
டி .ஆர்.ராஜகுமாரி, யூ ஆர் ஜீவரத்தினம் ,இருவரும் உயிருடன் இல்லை.
குமாரி சச்சு ,வெண்ணிறஆடை நிர்மலா,ஷோபனா,தபு ,நக்மா ,சதா ,லட்சுமி கோபாலசாமி ,கவுசல்யா ,கனகா. இவர்கள் அனைவரும் திருமண வயதை கடந்து விட்டவர்கள்.அதாவது இயல்பான மகப்பேறு வாய்ப்பினை இழந்து விட்டவர்கள்.
இந்த பட்டியலில் அனுஷ்கா ,திரிஷா ,ஹன்சிகா போன்றவர்கள் இணைகிற வாய்ப்பு இருக்கிறதா என்பது தெரியாது.
வெற்று உடம்பில் வெறும் இலையினால் அங்கம் மறைத்து பரபரப்பு ஏற்படுத்திய நடிகை கியாரா அத்வானி என்ன சொல்கிறார் ?
அவர் தேடுவது ஆசையை தணித்துக் கொண்டு ஓடுகிற ஆம்பளையை இல்லை.!
இச்சை தீர்ந்ததும் கணவனை கழற்றி விடுகிற கற்புக்கரசிகளும் திரை உலகில் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க இயலாது.
கியாராவின் கணக்கு இதோ…!
“எனக்கு புருஷனாக வருகிறவன் என்னை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். ( அதுதானே அவனது வேலை.) எனது நம்பிக்கைக்குரியவனாக இருப்பது அவசியம். ( இல்லையேல் விரட்டி விட்டுவிடுவேன் ) சுயமாக சிந்திக்க வேண்டும்.சுயம்புவாக நிற்கவேண்டும். கவுரவமானவனாக ,மற்றோரை மதிக்கத்தெரிந்தவனாக இருக்க வேண்டும். ஆணாதிக்க மனப்பான்மை கூடவே கூடாது.”என்கிறார்.