சக்தி இல்லையேல் சிவம் இல்லை!
சிவம் இல்லையேல் சக்தி இல்லை.!
உத்திர பிரதேச போலீசாருக்கு நேற்றைய புதன் கிழமை சோதனையான நாளாக அமைந்திருந்தது.
தியோரியா வை சேர்ந்த ஒரு பெண் தன்னை ஆதி சக்தி என சொல்லிக்கொண்டு பக்கதர்களை திரட்டி இருந்தாள் .
பசுவின் சிறுநீர் அருந்தினால் கொரானாவில் இருந்து தப்பிக்கலாம் என்கிற நம்பிக்கை உள்ளவர்களும் இருக்கிறார்கள் அல்லவா! அத்தகைய நம்பிக்கையாளர்களுக்கு அவள் ஆதி சக்தியாகவே தெரிந்தாள் .
சிவப்பு சேலை கட்டியிருந்தாள்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்திரவு போடப்பட்டிருந்தாலும் பெரும் திரளாக மக்கள் கூடி விட்டார்கள்.
அவர்களை காவல் துறையினர் கலந்து போகச்சொன்னார்கள்.
அவர்கள் களைந்து செல்ல மறுத்தார்கள்.
திடீரென ஒரு திருப்பம் .ஆதி சக்தி கையில் வாளேந்தி மிரட்ட ஆரம்பித்து விட்டாள் .”நான் ஆதி சக்தி “என போலீசை நோக்கி வாளை நீட்டினாள்.
நாங்களும் சக்திதான் என காவல் துறையினரும் லத்தியை சுழற்றி அடிக்க ,சற்று நேரத்தில் கூட்டம் கலைந்து ஓடிவிட்டது.
எப்படியெல்லாம் பிரச்னை வருகிறது பாருங்கள்.!