ஏறத்தாழ எல்லா முன்னணி நடிக ,நடிகையர் அனைவருமே மக்களை கேட்டுக்கொண்டு செய்திகள் வெளியிட்டிருக்கிறார்கள்.
உலகநாயகன் கமல்ஹாசன் தன்னுடைய வீட்டை மருத்துவ சேவைக்கு உதவுவதற்கு அரசு அனுமதி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில்தான் ஆக்ஷன் கிங் அர்ஜூன் சர்ஜா முன்னணி முக்கிய நடிகர்களுக்கு கோரிக்கை வைத்தருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,உலகநாயகன் கமல்ஹாசன் ,தளபதி விஜய், தல அஜித்குமார் ஆகியோருக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் “தமிழக மக்களில் 95 சதவிகித ரசிகர்கள் இவர்களுக்குத்தான் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினால் அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டார்கள்”என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.