ஒன்று பட்ட ஆந்திராவுக்கு சூப்பர் ஸ்டாராக இருப்பவர் பவன் கல்யாண் ..
இவர் எழுத்தாளர்,இயக்குநர் ,நடிகர் ,தயாரிப்பாளர் , பாடகர் ,ஸ்டண்ட் மாஸ்டர்,இப்படி பன்முகம் கொண்டவர்.நடிகர் சிரஞ்சீவியின் தம்பி.
நந்தினி ,ரேணு தேசாய் ,அன்னா லெசனவா ஆகிய மூன்று மனைவிகள் .முதல் இருவரை விவாகரத்து செய்து விட்டார்.
இவர் ஜன சேனா கட்சியின் தலைவரும் ஆவார்.
கொரானா ஒழிப்பு நிதியாக ஆந்திர பிரதேசத்துக்கு 50 லட்சமும்,தெலங்கானாவுக்கு 50 லட்சமும் கொடுத்துள்ள இவர் பிரதமர் நிவாரண நிதிக்கு 1 கோடியும் வழங்குவதாக அறிவித்திருக்கிறார் .