“கொரானா வைரஸ் தனக்கு வந்திருக்குமோ “என்கிற அச்சத்தில் ஒரு முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள உடுப்பியில் இருந்த 56 வயது முதியவருக்கு பயம்.
தன்னை கொரானா தாக்கிவிட்டதோ என்கிற அச்சம்.
வீட்டுக்கு வெளியில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டுக் கொண்டு செத்து விட்டார்.
இவருக்கு அந்த கொள்ளை நோய் இருந்ததா என்பதை போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்த பிறகுதான் முடிவு செய்ய முடியும்.அதுவரை அவரது குடும்பத்தினரை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி சொல்லி இருக்கிறார்கள்.