நடிகர் சேதுராமன், 2013ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் உட்பட வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 என இதுவரை நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர்.நடிகர் சேதுராமன் (வயது 37.). எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்தவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். சென்னையில் தனியாக கிளினிகா வைத்து நடத்தி வருகிறார்.இவருக்கு கடந்த 2016, பிப்ரவரி 12ல் திருமணம் நடந்தது.உமையாள் என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த சேதுராமனுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. நடிகர் சேதுவின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது .அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இன்று அவரது உடல் தகனம் நடக்கிறது.
நடிகர் நடிகைகள் இரங்கல்
நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், மாரடைப்பு காரணமாக நடிகர் மற்றும் மருத்துவர் சேதுராமன் மரணம் அடைந்துவிட்டதாகவும், அவருடைய குடும்பத்துக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ,’சேதுவின் மரண செய்தியால் அதிர்ச்சியில் இருக்கிறேன். சீக்கிரமாக சென்றுவிட்டார். மிகவும் நல்ல மனிதர்,” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு தன்னுடைய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நீ எங்கள் இதயங்களை நொறுக்கிவிட்டு சென்றிருக்கிறாய் சேது. ஏன் இவ்வளவு சீக்கிரமாக சென்றாய்? பிறரை காட்டிலும் நல்ல உள்ளங்கள் ஏன் வேகமாக இந்த பூமியைவிட்டு செல்கின்றன? உன்னுடைய அமைதியான குணத்தையும் உன் அழகான சிரிப்பையும் நான் நிச்சயம் மிஸ் செய்வேன். நீ திரும்பி வர மாட்டாயா என்று நினைக்கிறேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்
இயக்குநர் வெங்கட் பிரபு”தனது டுவிட்டர் பதிவில்,’36 வயதில் மாரடைப்பு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடவுளே இது நியாயம் அல்ல,” என்று பதிவிட்டுள்ளார்.
சேதுவின் நெருங்கிய நண்பரான சந்தானம் தனது ட்விட்டரில், என் உயிர் நண்பன் சேதுவின் மரணத்தால் தான் அதிர்ச்சியில் உறைந்திருப்பாதகவும், அவருடைய ஆன்மா நிம்மதியடைய பிரார்த்திப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சேதுவின் காதலியாக நடித்த நடிகை விஷாகா சிங். தனது ட்விட்டரில், “உன்னுடைய மரணம் குறித்த செய்தி பொய்யாக இருக்கக்கூடாதா… உன்னுடன் நடித்த அவ்வளவு இனிமையான தருணங்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இதை எழுதும்போது மனது வலிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்