புரட்சி திலகம் சரத் குமார் ,நடிகர் சசிகுமார் இணைந்து நடித்து வருகிற படம் நா..நா.
நிர்மல் இயக்குகிறார் .முரட்டுத்தனமான திரில்லர் படம்.
இந்த படத்தைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைகிற படம் சூப்பர் ஹிட் படத்தின் ரீ மேக்காக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள் .
மலையாள திரைப்பட கதாசிரியர் சேச்சி முதன் முதலாக இயக்கிய படம் கேரளத்தில் சூப்பர் ஹிட்.
ஒரு ராணுவ அதிகாரி,ஒரு போலீஸ் அதிகாரி இவர்களுக்கிடையிலான சிறு சண்டை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை ‘ஐயப்பனும் கோஷியும் ‘என்கிற பெயரில் திரைப்படமாக கொடுத்திருந்தார் சேச்சி.
அந்த படத்தைத்தான் பைவ் ஸ்டார் கதிரேசன் என்பவர் ரீ மேக் உரிமையை வாங்கி இருக்கிறார்.
இந்த படத்தில் சரத்குமார் ,சசிகுமார் இருவரையும் மீண்டும் இணைக்கலாம் என்று கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.பிருதிவி ராஜ் நடித்திருந்த கேரக்டரில் சசிகுமாரும் ,பிஜு மேனன் நடித்திருந்த கேரக்டரில் புரட்சித் திலகமும் நடிக்கக்கூடும் .