நாலு பேருக்குத் தெரிய கல்யாணம் செய்து கொண்டவர் யோகிபாபு. திடீர் கல்யாணமாக இருந்தது.குல தெய்வம் கோவிலில் வைத்து மஞ்சு பார்கவியை மனைவியாக ஏற்று கொண்டார்.திரை உலகப் பிரமுகர்களுக்கு தெரியாமல் நடந்த கல்யாணத்துக்கு உலகம் அறிய வரவேற்பு வைத்து சிறப்பு செய்து விடலாம் என நினைத்து இருந்தார்.
வடிவேலுவுக்குப் பிறகு தனிக் கொடி ஏற்றி இருப்பவர் அல்லவா .!வரவேற்பு நடத்தினால் அத்தனை நட்சத்திரங்களும் திரண்டு விடுவார்களே..!
வடிவேலு மகன்,மகன் கல்யாணத்துக்கு கிடைத்திராத சிறப்பு கிடைத்து விடும் என்கிற ஆசையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
வடிவேலுவை நேரில் சென்று அழைத்தாரா இல்லையா? தெரியவில்லை.
ஆனால் கொரானா அட்டமத்து சனியன் மாதிரி வந்து உலகத்தையே ஆட்டிக் கொண்டிருக்கிறது .இதில் பலரது இல்ல மங்கள நிகழ்ச்சிகள் தள்ளிப் போய் விட்டன.
அதில் யோகி பாபு கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியும் ஒன்றாக இருக்கலாம் .
ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி .
நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு .
சினிமா படப்பிடிப்புகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.பொதுமக்கள் யாரும் எங்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.
இதன்காரணமாக நடிகை உத்ரா உண்ணி, மலையாள நடிகர் மணிகண்டன் ஆச்சாரி, தெலுங்குத்திரையுலகின் முன்னணி ஹீரோ நிதின் ஆகியோர் தங்கள் திருமண விழாக்களை தள்ளி வைத்துள்ளனர்.
யோகிபாபுவின் வரவேற்பு நிகழ்ச்சி தள்ளி வைக்கப் படுமா?