மதங்களை கடந்தது காதல்.
அதற்கு மதமும் தெரியாது .ஜாதியும் தெரியாது. நிறமும் இல்லை.
காதலுக்கு தெரிந்த ஒன்றே ஒன்று மனம்.
இதனால்தான் இந்துவான ஹிருத்திக் ரோஷனும் இசுலாமியரான சுசான்னே கானும் திருமணம் செய்து கொண்டார்கள்.
அழகான இரண்டு ஆண் பிள்ளைகள் ஹிரே கான் ,ஹிரி கான்.
” அவரவர் மத நம்பிக்கையில் தலையிடல் தேவையற்றது. நாங்கள் சந்தோஷமாகவே வாழ்ந்தோம்.வாழ்கிறோம் “என்கிறார் ஹிருத்திக்.
இருவரும் பிரிந்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஒரு நடிகையினால் ஏற்பட்டது.
அமைதியாக இருவரும் சட்டப்படி மண முறிவு பெற்றார்கள்.
ஆனாலும் அவ்வப்போது இருவரும் பிள்ளைகளின் பொருட்டு உணவு விடுதிகளில் ,தியேட்டர்களில் சந்தித்துக் கொள்வார்கள்..
தற்போது சுசான்னே முன்னாள் கணவரின் மாளிகைக்கு திரும்பி இருக்கிறார்.
காரணம் சொல்கிறார் ஹிருத்திக் .
” நாடே கொரானாவுக்கு பயந்து வீடுகளில் முடங்கி இருக்கிறது. யாரையும் சென்று சந்திக்க முடியாது. எங்களுக்கு பிள்ளைகளின் நலன் முக்கியம். அம்மாவைப் பார்க்க இயலாமல் அவர்கள் வேதனை அடைந்து விடக்கூடாது.பிரிந்து வாழ்ந்த முன்னாள் மனைவி சுசான்னேயை வீட்டுக்கு வந்து பிள்ளைகளுடன் தங்கும்படி கேட்டுக் கொண்டேன்.அவரும் இணங்கி வந்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”என சொல்கிறார்.
இவ்வளவு இணக்கமாக இருக்கிற இவர்களை பிரித்தது எது?
தலைவிதான்!
ஏஎல்.விஜய்யின் தலைவி பயோபிக்கில் ஜெயலலிதாவாக நடித்து வருகிற கங்கனா ரனாவத் !
இவர் கிரீஷ் 3 படத்தில் நடித்து கொண்டிருந்தபோது ஹிருத்திக் ரோஷனுடன் இணக்கமாக இருந்தாராம்.காதல் வயப்பட்டு அடிக்கடி சந்தித்தார்கள் ..இப்படி பலவிதமான கிசுகிசுக்கள் பத்திரிகைகளில் அடிபட்டன.அந்த கிசுகிசுக்களுக்கு காரணமே கங்கனாதான் என ஹிருத்திக் போலீசில் புகார் செய்தார்.
“தங்களுடைய உறவை மறைப்பதற்காக இப்படியெல்லாம் ஹிருத்திக் புகார் செய்கிறார் என்பதாக கங்கனா பதிலுக்கு குற்றம் சாட்டி புகார் செய்தார்.
முடிவில் போதிய சான்று இல்லை என சொல்லி இருவரது புகாரையும் மும்பை போலீஸ் தள்ளுபடி செய்தது.
கணவன் மீதான குற்றச்சாட்டு மனைவியை காயப்படுத்தி விட்டது.
இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கொரானாவினால் ஒன்று சேர்ந்துள்ளவர்கள் நிரந்தரமான சேர்ந்திருக்க வேண்டும் என ஹிருத்திக்கின் ரசிகர்கள் கோரிக்கை விட்டிருக்கிறார்கள்.
கேட்பார்களா?