இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களில் தமிழ்நாட்டினை சேர்ந்த வ.உ சிதம்பரம் பிள்ளை, வாஞ்சிநாதன் போன்றவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
அறவழி போராட்டத்தில் நம்பிக்கை இழந்தவர்கள். அடிக்கு அடி ,உதைக்கு உதை என்கிற கொள்கையில் உடன்பாடு உள்ளவர்கள்.
“நாடு நம்முடையது.நம்மை அடக்கி ஆள்வதற்கு அந்நியனுக்கு என்ன அதிகாரம்? கடல் கடந்து வந்து ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிப்பதா என பொங்கியவர்கள் .
இவர்களைப் போல அண்டை மாநிலமான ஆந்திராவில் அல்லூரி சீதாராமராஜு ,கொமரம் பீம் ஆகிய இரண்டு விடுதலைப்போராட்ட வீரர்களை பற்றிய படத்தை இயக்கி வருகிறார் எஸ்.எஸ்.ராஜமவுலி.படத்தின்பெயர் ஆர்.ஆர்.ஆர்.என வைத்திருக்கிறார்.ராம ராஜ ராஜு என்பதின் சுருக்கமாக இருக்கலாம். 5மொழிகளில் தயாராகிற படம்.
இவரது படத்துக்கு இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
ராம்சரண் ,ஜுனியர் என்.டி .ஆர் ,அஜய் தேவகன் ,அலியா பட் ஆகியோர் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.
இந்த படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.
ராம்சரணின் பிறந்த நாள் !அன்பளிப்பாக !