மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் கரோனா தொடர்பான எச்சரிக்கை நோட்டீசை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் ஒட்டி பரபரப்பை உருவாக்கி விட்டார்கள்.
ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் இருப்பது உலகநாயகன் கமல்ஹாசனின் பூர்வீக வீடு. அந்த வீட்டை மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகமாக மாற்றி விட்டார். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு பெரும்பாலும் இங்குதான் நடக்கிறது.
இது அரசுக்குத் தெரியும்.காவல்துறைக்கும் தெரியும்.
அந்த வீட்டில்தான் நோட்டீசை ஒட்டி விட்டார்கள் .அதாவது வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களின் வீடுகளில் ‘தனிமைப்படுத்தல் ‘தொடர்பான எச்சரிக்கை நோட்டீசை மாநகராட்சி ஒட்டி வருகிறது. அதில் தனிமைப்படுத்தப்பட்டவரின் பெயருடன் எத்தனை நாட்கள் தனிமை படுத்தப்பட்டிருப்பார் என்கிற விவரம் இருக்கும்.
இந்த நோட்டீசை மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில் ஓட்டுவதற்கு என்ன காரணம்?
கமலின் மூத்த பெண் ஸ்ருதிஹாசன் 12 நாட்களுக்கு முன்பே இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பி விட்டார்.அவர் மும்பையில் தனித்து வாழ்வதாக பேட்டியும் கொடுத்து இருக்கிறார்.
கமலும் இளைய மகள் அக்ஷராஹாசனும் சென்னையில் தனித்தனி வீடுகளில் வாழ்கிறார்கள். இந்த நிலையில் கட்சி அலுவலகத்தில் ஒட்டியதற்கு என்ன காரணம்?அதுவும் கமலின் பெயரை குறிப்பிட்டதற்கு என்ன காரணம்?