“கவலைப்படாதீங்க…எங்கப்பன் முருகன் இருக்கான், காப்பாத்துவான் “என்று யோகிபாபு ஆறுதல் சொல்லியிருக்கிறார்.
கொரானா வைரஸ் தாக்கிய பிறகு மாநில அளவில் போடப்பட்ட ஊரடங்கு தற்போது இந்திய அளவில் விரிவாகி விட்டது.
“வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.”என்பது முக்கிய முழக்கமாக இருந்து வருகிறது.
மக்களின் மனம் கவர்ந்த நடிகர்களும் தலைவர்களும் மாறி மாறி தொலைக்காட்சிகளில் பேசி வருகிறார்கள்.
உலகநாயகன் கமல்ஹாசன் ,சின்னக்கலைவாணர் விவேக்,வைகைப் புயல் வடிவேலு ஆகியோரை தொடர்ந்து தற்போது யோகிபாபுவும் கோரிக்கை விட்டிருக்கிறார்,
இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடியாத சூழலில் வருத்தம் இல்லாமல் இருக்காது.ஆனாலும் மக்களின் நன்மை முக்கியமல்லவா!
“அரசு அறிவுறுத்தியபடி ,நம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் .அப்பன் முருகன் மக்களை அந்த விஷக்கிருமிகளிடம் இருந்து காப்பாற்றுவான்.அனைவரும் கடவுளை பிரார்த்தியுங்கள் “என்பதாக யோகிபாபு கேட்டுக்கொண்டிருக்கிறார்.