இதை விதி என சொல்வதா,திமிர் என சொல்வதா,எப்படி சொல்வதென தெரியவில்லை.
பிரபல பாலிவுட் பின்னணி பாடகி கனிகா கபூர் கடந்த மார்ச் 9 ஆம் தேதி லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார்.அப்படியே கான்பூர், லக் நவ் என்று சுற்றுப்பயணம் சென்றுவிட்டார். பல விஐபிக்கள் இவருடன் கலந்து கொண்டிருக்கிறார்கள் .அப்போதே இருமல்,காய்ச்சல் இருந்திருக்கிறது .லக் நவ்வில் இருக்கிற சஞ்சய் காந்தி போஸ்ட் கிராஜுவேட் ஆராய்ச்சி மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டபோது இவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.மார்ச் 20 -ல் அனுமதிக்கப்பட்டார் .
மருத்துவமனை நிர்வாகத்தை குற்றம் சாட்டினார்.
தற்போது நான்காவது முறையாக சோதனை செய்யப்பட்டதில் நோய்த் தொற்று அதிகமாக இருப்பது தெரிய வந்தது.
கனிகாவின் உறவினர் ஒருவர் பெயர் சொல்ல விரும்பாதவர் மிகவும் வருத்தப்பட்டதாக வட இந்திய ஊடகம் தெரிவித்திருக்கிறது.
“மருத்துவ அறிக்கைகளை பார்க்கிறபோது கவலை அளிப்பதாக இருக்கிறது. கனிகா சிகிச்சைக்கு ஒத்துழைக்கமறுப்பது கவலையாக இருக்கிறது.கடவுளிடம் பிரார்த்திப்பதை விட வேறு வழி தெரியவில்லை.”என்று சொன்னதாக அந்த ஊடகம் தெரிவித்திருக்கிறது.