எவ்வளவோ பிரச்னைகள் ,துரோகங்கள் சுற்றி நின்று சூறையாட முயன்றாலும் தன்னுடைய நம்பிக்கையினால் அவைகளை எதிர்கொண்டு முன்னேறி வருகிறவர் இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன்.
உலகநாயகன் கமல்ஹாசனுடன் வேட்டையாடு விளையாடு வெற்றிப்படத்தை கொடுத்தவர் கவுதம் மேனன் .தற்போது அந்த படத்தின் பார்ட் 2 எடுக்கப்போவதாக ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது .
இது உண்மையா?
“வேட்டையாடு விளையாடு 2 தொடர்பாக கமல்சாருடன் பேசினேன். நான் சொன்ன ஒன் லைன் அவருக்கு பிடித்திருந்தது. அதை சற்று இன்னும் விரிவாக்கி சொல்லப்போகிறேன். கொரானா தொடர்பான விலகி இருத்தல் காலகட்டம் முடிவுக்கு வந்த பிறகு அவரை மீண்டும் சந்தித்துப் பேசி கதையைப் பற்றி முடிவு செய்வோம். கமல்சாருடைய கையில்தான் முடிவு இருக்கிறது” என்று கவுதம் மேனன் சொல்லியிருக்கிறார்.
இந்த படத்தில் கமலுக்கு இணையாக அனுஷ்கா நடிக்கப் போவதாக ஒருசெய்தி இருக்கிறது.
அவர் என்ன சொல்கிறார்.?
“நானும் கவுதம் மேனனும் நல்ல நட்பில்தான் இருக்கிறோம். ( அட எதுக்கும்மா சொல்லணும். வெட்டியா கிசு கிசு வரும்.) அவர் எப்ப அழைத்தாலும் கால்ஷீட் கொடுக்காத தயாராக இருக்கிறேன் .வேட்டையாடு விளையாடு 2 வில் நடிப்பேன்” என சொல்கிறார்அனுஷ்கா..