ராஜ்கபூரின் கடேசி மகன் ரிஷிகபூர்.
கேன்சர் நோய்க்கு சிகிச்சை பெற்று இந்தியா திரும்பி இருக்கிறார்.
“உங்களுக்கென்ன வீட்டில் விஸ்கி,பிராந்தி பாட்டில்களை ஸ்டாக் வெச்சிருப்பீங்க “என்று யாரோ ஒரு ரசிகன் சொன்னதற்கு பொங்கி எழுந்த மனுஷன்தான் இந்த ரிஷி.
எங்கே இவருக்கு ஞானம் பிறந்ததோ…. திடீரென அரசுக்கு ஆலோசனையை அள்ளி விட்டிருக்கிறார்.
“ஒரு யோசனைதான்.! யாரும் என்னை தப்பா நினைக்காதீங்க.வீட்டுக்குள்ள மன அழுத்தமுடன் இருக்காங்க.இந்த நோயைப்பற்றிய பயம் இருக்கும்.அதனால அந்த சாயங்கால நேரத்தில சிறிது நேரம் மதுக்கடைகளை திறந்து வெச்சா என்ன?” என்று கேட்டிருக்கிறார்.
இவர் அமெரிக்காவிலேயே இன்னும் சில மாதங்கள் இருந்திருக்கலாமோன்னு தோணுது.!