பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது.!
அரசியல் காரணங்கள் காரணமாகவே மக்கள் நீதி மய்யத் தலைவரின் கட்சி அலுவலகத்தில் சென்னை மாநகராட்சியின் கொரானா தனிமைப்படுத்தல் நோட்டீசை ஒட்டினார்கள் என்பது தெளிவாகிவிட்டது. ஒட்டிய சில மணி நேரங்களிலேயே அந்த நோட்டீசை அகற்றிவிட்டார்கள்.
அதற்கான காரணம்தான் தெளிவாக இல்லை.
தெரியாமல் ஒட்டினோம் என்றால் இந்த கடுமையான கால கட்டத்துக்கு ஏற்புடையது இல்லை.
ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அந்த வீட்டு முகவரியில் நடிகை கவுதமியின் பெயர் இருந்தது .பாஸ் போர்ட்டில் அந்த முகவரி இருந்ததால் ஒட்டியிருக்கலாம் என்பது ஊடகங்களின் யூகம் .
ஆனால் கவுதமி என்ன சொல்கிறார்.?
“நான் பிப்ரவரி தொடக்கத்தில் அமெரிக்கா புறப்படுச்சென்றேன்.அப்போது கொரானா தொற்று நோய் பற்றிய பயம் இல்லாமல் இருந்தது.அதனால் என்னை எந்த வித சோதனையும் செய்யவில்லை.20 நாட்களுக்கு முன்னதான இந்தியா திரும்பினேன். சென்னையில் எனது கிழக்கு கடற்கரை சாலையில் வீட்டில்தான் இருக்கிறேன்.என் வீட்டில் நோட்டீஸ் ஒட்டவில்லை. எல்லோரும் அரசின் உத்திரவை ஏற்று நடந்து கொள்ளுங்கள்”என்கிறார்.
பிறகே எந்த காரணங்களுக்காக கமலின் கட்சி அலுவலகத்தில் ஓட்டினார்கள்?