இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா வின் ‘மனோபாலா பிக்சர் ஹவுஸ் ‘மற்றும்R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பாம்பு சட்டை’.
“சதுரங்க வேட்டை” படத்தின் வெற்றியை தொடர்ந்து மனோபாலா தொடுக்கும் புதிய வேட்டையான ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார், இவர் இயக்குனர் ஷங்கரின் இணை இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.. பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த ‘பாபி சிம்ஹா ‘இப்படத்தின் மூலம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். . ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெற்ற அஸீஸ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பதிவு நாளை முதல் ஆரம்பமாகிறது. திட்டமிட்டபடி படமெடுத்து வெளியிடும் மனோபாலா இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட முனைப்பாக உள்ளார்.