லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘பையா’ படத்தை தொடர்ந்து,கிட்டத்தட்ட எழு வருடங்களுக்குப்பின் லிங்குசாமி ,கார்த்தியுடன் மீண்டும் இணைந்துள்ள படம் தான் ‘எண்ணி ஏழு நாள்’.இப் புத்தாண்டில் தனது முதல் படைப்பாக இதை இயக்கும் லிங்குசாமியின் அடுத்த டார்கெட் சண்டக்கோழி பார்ட்-2..தானாம்.
விஷாலுக்கு ஆக்சன் ஹீரோ என்ற இமேஜை ஏற்படுத்தி கொடுத்த லிங்குசாமியின் ‘சண்டக்கோழி’. படத்தின் வெற்றிக்குப்பின் இருவரும் பல வருடங்கள் கழித்து மீண்டும் ‘சண்டக்கோழி-இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளனர்.. ஆக கார்த்தி, விஷால் என்ற இரு இளம் புயல்களுடன் லிங்குசாமி மீண்டும் தன் சாகசத்தை கோலிவுட்டில் நிகழ்த்தி காட்ட தயாராகிவிட்டார்.என்கிறார்கள் கோடம்பாகதினர்.