மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தனித்து வாழ்ந்தாலும் உலகப்போக்குப் பற்றியும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்.இயக்கத்தவர்க்கு ஆலோசனை,அறிவுரை அவ்வப்போது சோசியல் மீடியாக்கள் வழியாக வந்து கொண்டுதான் இருக்கின்றன.
கொரானோ வைரஸை எதிர்த்து போரிடுகிற மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு சாதனங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக ஒரு தகவல் வந்தது.
உடனே தட்டி விட்டார் அரசுக்கு தன்னுடைய கண்டனப்பதிவை!
“போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.”
இதுவும் நியாயம்தானே! தேர்வு எழுதுகிறவனுக்கு பேனா இல்லையென்றால் அவன் எப்படி எழுதுவான்.
இந்த நேரத்தில் அவருக்கு ஒரு கவிதையும் வந்திருக்கிறது.!
இந்த கவிதை எதற்கு தலைவரே! சாவு பயம் வருகிறது தோழர்.!