தளபதி விஜய் வீட்டுக்கு நோட்டீஸ் ஒட்ட சுகாதார அதிகாரிகள் சென்றதாக இன்று காலையில் இருந்து பரபரப்பான தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது.
மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கவுதமி இருப்பதாக நினைத்து ஒட்டியதாகவும் பின்னர் அதை கிழித்து விட்டதாகவும் முன்னர் காரணம் சொன்னார்கள்.
இன்று விஜய் வீட்டுக்கு சென்றார்களாமே ?
எந்த யூகத்தில் சென்றிருப்பார்கள்?
மும்பை சென்றதை வெளிநாடு சென்றதாக நினைத்து ஒட்டப்போயிருப்பார்களா?
(அவர் லொக்கேஷன் பார்த்து விட்டு திரும்பியதும் வருமானவரி ரெய்டு நடத்தப்பட்டது.)
தற்போது விஜய் வெளிநாடு எதற்கும் செல்லவில்லை.
மனைவி சங்கீதாவின் பெற்றோர் லண்டன் வாசிகள் .அவர்களில் யாரும் வரவும் இல்லை.
மகன் கனடாவில் இருக்கிறார் .அவரும் வரவில்லை.
அட……! ஃ பிளைட் எதுவுமே இல்லியேப்பா ,எப்படிப்பா வந்திருக்க முடியும்.?
விஜய் தரப்பில் விசாரித்தால் “யாருமே வெளிநாடு போய் வரலீங்க. சென்னையிலேதான் இருக்காங்க.”என்கிறார்கள்.
ஆனால் சுகாதார அதிகாரிகள் விஜய் வீட்டுக்கு சென்று விசாரித்து விட்டு திரும்பியதாக வந்த செய்தி மட்டும் அழுத்தமாக பதிந்து இருக்கிறது.
முன்னணி நடிகராச்சே ..மேக் அப் இல்லாமல் எப்படி இருப்பார்ங்கிறத பாக்கிற ஆசை அவங்களுக்கு இருக்காதா என்ன!