கொரானாவை விரட்ட மருத்துவம் மட்டும் பயன்கொடுக்காது ,யாகமும் உதவும் என்று ஆன்மீக மார்க்கத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நினைக்கிறார்கள்.
அவர்களில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி -ரோஜா எம்.எல்.ஏ குடும்பமும் ஒன்று.
இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
கொரோனா வைரஸ்உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில் அதனை தடுக்க வேண்டி நடிகை ரோஜா குடும்பத்துடன் தனது வீட்டில் ருத்ராபிஷேகம் நடத்தியுள்ளார்.ரோஜா தற்போது நகரி தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். எம்எல்ஏ என்ற முறையில் கொரோனா பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ரோஜா.
.யாகத்தின் முடிவில் நடிகை ரோஜா கூறுகையில்,, “இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும், நாட்டில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் தீர வேண்டும். கொரோனாவில் இருந்து தப்பித்து மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும், அதற்காகத்தான் இந்த ருத்ராபிஷேக யாகத்தை நடத்தியிருக்கிறோம். எல்லா மக்களும் எல்லா வளத்துடனும் நன்றாக இருப்போம். எல்லோரும் சந்தோஷமா இருங்க தைரியமா இருங்க “என தெரிவித்துள்ளார்.