கிராமத்துப் பக்கம் ஒரு சொலவடை சொல்வாங்க .
“வித்தராக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம் ,கத்தாழை முள்ளு கொத்தோட குத்துச்சாம்”. இந்த மாதிரி கதையாகிப்போச்சு தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டியின் டிக்ளரேஷன்.
“என்னுடன் இத்தனை பேரு படுக்கையை பங்கு போட்டுக்கிட்டாங்க”என்று தெலுங்கு, தமிழ் நடிகர்கள் ,டைரக்டர்கள் பெயர்களை எல்லாம் பட்டியல் போட்டு வெட்கமே இல்லாமல் சொன்னவர் இந்த ஸ்ரீரெட்டி. அரை நிர்வாணப்போராட்டம் நடத்தி ஊடகங்களில் பெரிய அளவில் விளம்பரம் தேடிக்கொண்டவர்.
ஆந்திராவில் வாழ முடியாத சூழ்நிலை.சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்து விட்டார். இங்கு ஆடம்பரமான வாழ்க்கை.
எந்த ராகவாலாரன்சை பட்டியலில் சேர்ந்திருந்தாரோ அந்த ராகவா லாரன்ஸ் தன்னுடைய படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புத் தருவதாக சொன்னபிறகு சற்று சுருதியை மாற்றிக் கொண்டவர்.
தற்போது இந்த ஸ்ரீரெட்டி சொல்கிறார் “நான் இன்னமும் கன்னிப்பொண்ணுதான்!”
கல்யாணம் ஆகாதவங்கல்லாம் கன்னிதான் என்கிற அர்த்தத்தில் சொல்லியிருப்பாரோ?
கொரானா எப்படிய்யா நாட்டை விட்டு ஓடும் ?