இயக்குநர் ஹரியின் படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கப் போகிறார் என்பதாக ஒரு செய்தி பரவலாக ஊடகங்களில் வந்தது.
ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதாகவே கூறப்பட்டது.
ஆனால் அந்த செய்தியை பூஜாஹெக்டே மறுத்திருக்கிறார்.
“ஹலோ….நான் தமிழ்ப்படத்தில் நடிக்கப்போவதாக ஒரு செய்தியைப் பார்த்தேன்.நீங்களே ஒரு முடிவுக்கு வந்துவிடுவதா?
நான் தற்சமயம் எந்தப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்படவில்லை.
ஆனால் சிலர் கதைகளை சொல்லியிருக்கிறார்கள்.இந்த வருடம் எப்படியும் தமிழ்ப்படத்தில் நடித்து விடுவேன்.அந்த முடிவில்தான் இருக்கிறேன்.வெயிட் பண்ணுங்கள்” என்பதாக தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவு செய்திருக்கிறார்.