விதி என்பதா,அல்லது இயற்கை தந்த தண்டனை என்பதா?
அப்படித்தான் ஆகிவிட்டது பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜின் நிலை !
‘அடுஜீவிதம் ‘என்கிற படத்துக்காக படப்பிடிப்பு குழு ஜோர்டான் சென்றிருந்தது.
கதையின் நாயகன் பிருத்விராஜ்.
ஜோர்டானில் வாடிரம் என்கிற பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடந்து வந்தது.ஏப்ரல் இரண்டாம் வாரம் வரை படப்பிடிப்பு நடத்த அரசுஅனுமதி அளித்திருந்தது.படத்தில் காணப்படுவதுதான் அந்த வாடிரம் பகுதி.
ஆனால் படக்குழுவில் இருந்த ஒமானி நடிகர்களில் ஒருவர் அவரது மொழிபெயர்ப்பாளருடன் ‘குவாரன்டைனில்’ தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார். கொரானா கடுமையாக பரவும் அபாயம் உணர்ந்த அரசு படப்பிடிப்பு நடத்துவதை தடை செய்து விட்டது.
இதனால் மொத்தப் படக்குழுவும் ஜோர்டான் பாலைவனத்தில் மாட்டிக்கொண்டு இருக்கிறது.
உணவுப் பற்றாக்குறை ,கொரானா பரவும் ஆபத்துகளுக்கு மத்தியில் பிருத்விராஜும் மற்றவர்களும் இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் பிளசி மிகுந்த கவலையுடன் இதை தெரிவித்திருக்கிறார்.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஜோர்டானில் இருக்கிற இந்திய தூதரகம் வழியாக படக்குழுவுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.