“ரொம்பவும் வேதனையாக இருக்கிறது..இன்னும் இரண்டு வாரங்கள் மிகவும் கடினமாக இருக்கலாம் “என்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
“இது மிகவும் கொடிய பிளேக் நோயைப் போன்றது” என்கிறார்.மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின் அதிபர் அச்சத்திலிருப்பது அந்த நாடு எதிர்கொண்டிருக்கிற பேராபத்தை உணர்த்துகிறது.
“ஒவ்வொரு அமெரிக்கனும் அந்த கடினமான நாட்களை எதிர் கொண்டாக வேண்டும்.”என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
வெள்ளை மாளிகையின் கொரானா நோய் தொடர்பான அதிகாரி டெபோர் பிர்க்ஸ் பேசுகையில் ” இதற்கு மந்திர மாயாஜால மருந்து எதுவும் இல்லை.நமது நடவடிக்கையின் வழியாகத்தான் நோயின் பிடியில் இருந்து தப்பிக்க முடியும். அமெரிக்காவில் 240,000 பேர் வரை பலியாகலாம் “என எதிர்பார்ப்பதாக கூறினார்.
.